திருவாரூரில் 14 வயதுக்குட்பட்டோருக்கான இலவச இருதய பரிசோதனை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையின் சார்பாக 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இதயம் தொடர்பான இலவச பரிசோதனைகளை செய்து கொண்டனர். மேற்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் தனியார் மருத்துவமனையின் சிறப்பு காப்பீட்டு திட்டம் மூலமாக இலவசமாக சிகிச்சை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.