ஈரோடு அருகே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
ஈரோடு மாவட்டம், வெ.குட்டப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை, சராசரியாக ஆண்டுக்கு 100 குழந்தைகள் கல்வி பயின்று வந்த நிலையில், அண்மைக்காலமாக மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வெ.குட்டப்பாளையம் கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும், மாணவர்களை இலவசமாக பேருந்துகளிலேயே அழைத்து வருவதும், பின்னர் வீட்டில் விடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சி, பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.