கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவசமாக பீர்

இலவசமாக பீர் வேணுமா? அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ!! கொரோனா தொற்றில் உலகளவில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில் தான் இந்த ஆஃபர்.

ஒரு பக்கம் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருந்தாலும் , அதற்கான தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்துக்கிட்டிருந்தாலும், 

சில தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகள சொல்லி மக்கள தடுப்பூசி எடுத்துக்க வைக்க முயற்சி மேற்கொண்டு இருக்காங்க.

அந்த வகையில் அமெரிக்காவின் ஓஹியோவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பீர் கொடுக்க Samuel Adams beer என்ற நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த சலுகையைப் பெற, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை காட்டி இலவசமாக பீர் பெற்று கொள்ளலாம்!

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மரிஜுவானா உற்பத்தி நிறுவனமும் இளைஞர்களுக்கு கஞ்சாவையும் வழங்கி வருகிறது.

கிறிஸ்பி கிரீம் டோனட்ஸ் என்ற நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவசமாக டோனட்டை வழங்குகிறது.

யுஎஸ் டுடே(USTODAY) அறிக்கையின்படி, தனியார் நிறுவனங்கள் அளித்துள்ள இந்த சலுகைகளால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாக சொல்கிறது .

அமெரிக்கா மட்டுமல்லாது சீனாவிலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சில நகரங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச ஐஸ்-கிரீம் வழங்கப்படுகின்றது.

Exit mobile version