போலி ஆர்.சி புத்தகங்களை தயார் செய்து சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி

நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்களின் போலி ஆர்.சி புத்தகங்களை தயார் செய்து சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட கும்பலை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்களுக்கு போலியாக ஆர்.சி. புத்தகங்கள் தயார் செய்து, குறைந்த வட்டியில் பணம் பெற்று அதனை அதிக வட்டிக்கு கொடுத்து மர்ம கும்பல் மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், இரு சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து வரும் ஸ்டீபன்ராஜ் என்பவரது நிதி நிறுவனத்திற்கு வந்த சிலர், ஆர்.சி. புத்தகங்களை கொடுத்தனர். இதில், சந்தேகமடைந்த ஸ்டீபன் ராஜ், அதனை சோதனை செய்த போது, ஒரே ஆர்.சி புத்தகங்களை கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆர்.சி புத்தகங்களை போலியாக தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

Exit mobile version