ஈரோட்டில் காவல்துறையினரின் தணிக்கையில் பறிமுதல் செய்த 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுத் தருவதாக கூறி 36 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த 2 பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது எந்த வித ஆவணங்களும் இன்றி காரில் எடுத்துபவரப்பட்ட 1 கோடியே 50 லட்சம் ரூபாயை காவல்துறை பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணம் யாருடையது என்று விசாரணை செய்ததில், அந்த பணம் சென்னையை சேர்ந்த முகமது ரயாஜுதீன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பணத்திற்கான எந்தவித முறையான ஆவணங்களும் அவரிடம் இல்லை என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்
எனவே பணத்திற்காண முறையான ஆவனங்களை கான் பித்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு காவல் துறையினர் முகமது ரியாஜுதுனிடம் கூறியுள்ளன. இதனை அடுத்து முகமது ரியாஜுதீன் சென்னையை சேர்ந்த அவரது நண்பரான வெங்கடேஷ் மற்றும் சலீம் என்பவரை தொடர்பு கொண்டு காவல்துறையிடம் இருந்து எப்படி பணத்தை பெறுவது என்பது குறித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் சலீம் ஆகியோர் தங்களுக்கு காவல்துறை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் நன்கு பழக்கம் என்றும் 36 லட்சம் செலவு செய்தால் எந்த வித ஆவணங்களும் இன்றி 1 கோடியே 50 லட்ச ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.இருவரின் பேச்சை நம்பி 36 லட்சம் பணத்தை முகமது ரியாஜுதீன் கொடுத்துள்ளார்.
சிறிது நாட்கள் கழித்து சொன்னபடி வெங்கடேஷ் மற்றும் சலீம் ஆகிய இருவரும் பணத்தை பெற்று கொடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த முகமது ரியாஜுதீன் கொடுத்த 36 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் கொலை உன்னை கொலை செய்துவிடுவோம் என்று வெங்கடேஷ் மற்றும் சலீம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ரியாஜுதீன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவரும் மீதும் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சென்னையை சேர்ந்த வெங்கடேஷ்யை கைது செய்த சிறையில் அடைத்த காவல்துறையினர் மேலும் அவரது கூட்டாளியான சலீம் என்பரை தேடி வருகின்றனர்..இவர்கள் இருவர் மீதும் சென்னையில் ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…