நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பீகாரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடியில் நாளை ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். லண்டனில் சட்ட விரோதமாக19 கோடி ரூபாய் மதிப்புடைய வீடு வாங்கியது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். நாளை காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வதேராவிற்கு சம்மன் அனுப்பப்படுவது இது 9வது முறையாகும். சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால், அவர் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.