டெல்லியில், நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா கட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், மூன்றாம் கட்ட பரவலால் டெல்லி மோசமான நிலைமையை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போது, மூன்றாம் கட்டத்தைவிட, நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறிய கெஜ்ரிவால், படுக்கைகள் பற்றாக்குறையால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வயது வரம்புகளை நீக்குவது தொடர்பாக, மத்திய அரசிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளதாகவும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக வீடு வீடாக பிரசாரம் செய்ய, டெல்லி அரசு தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார்.