நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய குளம் – விவசாயிகள் மகிழ்ச்சி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள ஓடத்துறை குளம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பவானி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஓடத்துறையில் 200 ஏக்கர் பரப்பளவும் 15அடி உயரமும் கொண்ட ஓடத்துறை குளம் இருக்கிறது.இந்த குளம் ஓடத்துறை, ஒத்தகுதிரை, பொம்மநாயக்கன்பாளையம், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த குளம் மூலம் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் ஓடத்துறை குளம் வறண்டு கிடந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்தது.

இதனிடையே கடந்த சில நாட்களாக கோபிச்செட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓடத்துறை குளத்திற்கு நீர் வரத்து அதிகமானதால் குளம் நிரம்பி வழிகிறது.

இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version