நெல்லையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது

நெல்லையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் இருந்து, 223 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தனியார் கல்லூரி ஊழியர் விபின் என்பவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி கொள்ளை நடந்து. இதில், 100 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணமும் கொள்ளை போனது. இது குறித்து விபின் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 223 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version