ரயில்வேயில் நான்கு லட்சம் பேர் புதிதாக பணி அமர்த்தப்படுவார்கள்

ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக, ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள அனுரத் விரைவு ரயில் உட்பட 22 ரயில்களின் சேவை நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டார். ரயில்வே துறையில் காலியாக இருந்த 2.82 லட்சம் பணியிடங்களில், 2017ஆம் ஆண்டு 1.51 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

2019-20 ல் 53 ஆயிரம் பணியிடங்களும் 2020 -21 ல் 46 ஆயிரம் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். இதில் முதல் கட்டமாக 1.31 லட்சம் காலியிடங்கள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிரப்பப்படும்.

மீதமுள்ள 99 ஆயிரம் பணியிடங்கள் 2021க்குள் நிரப்பப்படும் என உறுதியளித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரயில்வே துறையில் நான்கு லட்சம் பேர் புதிதாக பணி அமர்த்தப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.

Exit mobile version