அத்தி வரதரை தரிசிக்க தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள்பாலித்து வரும் அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், இன்று நேரிட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், அத்தி வரதரை பொதுமக்கள் சிரமம் இன்று தரிசிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். திருப்பதியை விட அதிகமான அளவில் பக்தர்கள் வருவதை சுட்டிக் காட்டிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.