திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனுக்களை பெற்ற 300க்கும் மேற்பட்டோர், அவற்றை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. விருப்ப மனு அளித்தவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 தொகுதிகளுக்கும் இன்று மாலை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.