மும்பையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் வீடு உட்பட, 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், DHFL நிறுவனத்துக்கு யெஸ் வங்கியின் மூலம் மூவாயிரத்து 700 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, அந்நிறுவனத்திடம் இருந்து 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் ராணா கபூரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் DHFL நிறுவனத்தின் உரிமையாளர் வதாவன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் ராணா கபூருக்கு சொந்தமான வீடு உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.