திமுக மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

ஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்குத் துணை நின்றதுடன், அதற்குக் கூலியாகப் புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளைப் பெற்றுக் கொண்ட திமுக, ஈழத்தமிழர் நலன் குறித்துப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது என்று தெரிவித்துள்ளார். திமுகவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை, செய்யப் போவதும் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிப்பதாக விமர்சித்துள்ளார். திமுகவின் இந்தப் புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version