புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க உதவிய முதலமைச்சருக்கு இஸ்லாமிய அமைப்பினர் உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புரெவி புயல் காரணமாக நாகையில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் தேசமடைந்தது. இதனிடையே, பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி குளத்தை சீரமைக்க 4 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். மேலும், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க உதவிய முதலமைச்சருக்கு இஸ்லாமிய அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.