அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் – துறவிகள் மாநாட்டில் தீர்மானம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாக துறவிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்ஜில் 3 நாட்கள் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்ச்சியில் பத்ரிநாத் மடத்தின் சங்கராச்சாரியார் சொருபானாந்த சரஸ்வதி சுவாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்றும், இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக சொருபானந்த சரஸ்வதி சுவாமி தலைமையில் அயோத்திக்கு ஊர்வலமாக செல்வது என்றும், கட்டுமான பணிகள் முடியும் வரை அயோத்தியில் தங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்து அயோத்தி குறித்த முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Exit mobile version