விழுப்புரம் மாவட்டம் புளிச்சபள்ளம் பகுதியில் புதிய உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டடம் அமைக்க சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினர்.
15 ஆயிரத்து 32 சதுர அடியில் பரப்பளவில் 6 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிதாக உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற குடியிருப்பு கட்டடம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது. அதனை அடுத்து கட்டடப் பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைமை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்தி, வானூர் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.