கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கோவையில் திறன்மிகு நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 224 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

62 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவை பெரிய குளத்தின் கரையை புனரமைத்து மேம்படுத்துத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்வசிந்தாமணி கரையை புனரமைக்க 31 கோடியே 47 லட்சம் ரூபாயும், திவான்பகதூர் சாலையில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்ட 40 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி. விளக்குகள் அமைக்க 74 கோடியே 10 லட்சம் ரூபாய், சிவராம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு 14 கோடியே 98 லட்சம் ரூபாய் என மொத்தம் 224 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி தற்போது கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

 

Exit mobile version