அமெரிக்காவில் நடைபெற்ற பார்முலா ஒன் உலக சாம்பியன் போட்டியில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் 6வது முறையாக பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில 19வது பார்முலா ஒன் கார்பந்தயம் நடைபெற்றது. 20 போட்டிகளைக் கொண்ட நடப்பு சீசனில், 308 கிலோ மீட்டர் வெற்றி இலக்கை எட்ட, மெர்சிடஸ் அணியின் ஹாமில்டனுக்கும், போட்டசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பின்லாந்து வீரரான போட்டஸ் ஒரு மணி 33 நிமிடம் 55 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து, சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை ஆறாவது முறையாக அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து, ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், வெர்ஸ்ட்டாப்பன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.