திருமண நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய முன்னாள் ரூட் தல

சென்னையில் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமணத்தில், 4 அடி நீள பட்டாக்கத்தியால் மணமக்கள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், பச்சையப்பன் கல்லூரியில் படித்த முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமணம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட மணமகனின் நண்பர்கள், 4 அடி நீள பட்டாக் கத்தியுடன் வந்தனர்.மணமக்களை வாழ்த்த மேடை ஏறிய அவர்கள், 4 அடி நீளப் பட்டக்கத்தியை மணமக்கள் கையில் கொடுத்து, வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதன்பிறகு, பட்டாக்கத்தியால், மணமக்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர். மேலும் மேடையில் இருந்த மற்றொரு இளைஞர், மற்றொரு கத்தியை கையில் வைத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் தற்போது இணையங்களில் பரவி வருகிறது.

Exit mobile version