முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தினர்..

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே  நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள்  கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.

Exit mobile version