குடியரசுக்கட்சியினர் பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள் என, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பராக் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓபாமா உரையாற்றினார்.
டிரம்ப் நிர்வாகத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர்,குடியரசுக் கட்சியினர் பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவதாக குற்றம் சாட்டினார். எளியோருக்குப் பாடுபடுவதாகக் கூறி வரும் குடியரசுக் கட்சியினர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.