டிக் டாக்கில் ட்ரெண்டாகும் முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன் "Aurelia Dobre"!

ரோமானியாவைச் சேர்ந்த ஔரலியா டோப்ரே, அந்த நாட்டு சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றதுடன், உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். நாற்பத்தேழு வயதாகும் அவர், இப்போது கணவர் மற்றும் நான்கு மகன்களுடன், அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வசித்து வருகிறார். வயதெல்லாம் வெறும் எண் தான் என்று சொல்லும் வகையில், அவ்வப்போது ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்து டிக் டாக்கில் வீடியோ வெளிட்டு வருகிறார். ஐந்து புள்ளி ஒன்று மில்லியன் ஃபாலோயர்களை டிக் டாக்கில் வைத்திருக்கும் இவரது வீடியோ தற்போது வைரலாகிறது. 

Exit mobile version