எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரை!

கோவை வால்பாறை பகுதியில் நடைபெற்ற புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் பேசிய, முன்னாள் அமைச்சர் அவர்கள், அதிமுக கழகத்தினை தோற்றுவித்து தொடர்ந்து வெற்றியினை மட்டுமே நமக்கு அளித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அவரின் மறைவிற்கு பிறகு வெறும் 17 லட்சமாக இருந்த தொண்டர்களை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றி கட்சிக்கு வலுசேர்த்தவர் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அம்மா முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்கள் செய்தார் என்று குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் அவர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்தாலும் கூட ஒவ்வொரு குடும்பத்திலும் இன்றும் வாழ்ந்து வருகிறார் என்று கூறினார். தமிழகத்தில் 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்து பேசினார்.
YouTube video player

Exit mobile version