ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணன் தடுப்பூசி வழங்குவதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பணன் தடுப்பூசிகளின் விவரம், கொரோனா தொற்று தடுப்பு பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொரனோ தடுப்பூசி செலுத்துவதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கபசுரக் குடிநீர் பொடி மற்றும் முக கவசங்களை ஊராட்சி உறுப்பினர்களிடம் வழங்கிய அவர், வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி மளிகைப் பொருட்களை வழங்கினார்.