இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. தேவநாதன் யாதவை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திரு. ஜெயகுமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு ஆலோசனை சந்திப்பாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். மேலும் நிரூபர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.