அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு இரங்கல்

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் இரங்கல் தெரிவித்தனர்.

கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் வயது மூப்பின் காரணமாக காலமானார். சென்னை அண்ணா நகரில் உள்ள கோகுல இந்திராவின் வீட்டில் வைக்கப்பட்ட சுப்பிரமணியன் உடலுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கோகுல இந்திராவின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரும் சுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Exit mobile version