முன்னாள் மேயர் கொலை வழக்கு: கார்த்திக் ராஜாவுக்கு 5 நாட்கள் சிபிசிஐடி காவல்

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் ராஜாவை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக மாநில பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் ராஜா, நெல்லை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி பாபுவின் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். சிபிசிஐடி தரப்பில் கார்த்திக் ராஜாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி பாபு, கார்த்திக் ராஜாவை 5 நாட்களுக்கு சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் கார்த்திக் ராஜாவை அழைத்து சென்றனர்.

Exit mobile version