வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக சொந்த இடத்தை தந்த முன்னாள் கால்பந்து வீரர் பெய் சுங் பூட்டியா!!!

21 நாள் ஊரடங்கு உத்தரவையொட்டி வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பெய் சுங் பூட்டியா கூறியுள்ளார்.

அஸ்ஸாமில் ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவையொட்டி தங்க இடமின்றி அவர்கள் அவதிப்படுள்ளனர். இத்தனை அடுத்து கேங்க்டாக் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனக்கு சொந்தமான 4 தளம் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் அவர்களை தங்க வைக்க உள்ளதாக பெய்சுங் பூட்டியா வீடியோ வெளியிட்டுள்ளார். இதை அறிந்த பலரும் பூட்டியாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version