காசோலை மோசடி வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ காஞ்சனா கமலநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வான காஞ்சனா கமலநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வம் என்பவருக்கு, 24 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளார். வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துள்ளது. இதனையடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடர்ந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு காசோலை மோசடிக்காக காஞ்சனா கமலநாதனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.