ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில், அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அப்ரூவராக மாற உள்ளதால், ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் வலுத்துள்ளது.
ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் சட்ட விரோதமாக 305 கோடி ரூபாய் வெளிநாடு முதலீடுகள் பெற்ற புகாரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் டெல்லி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முன்னாள் இயக்குனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் வலுத்துள்ளது.