டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் உடல்நலக் குறைவால் காலமானார்

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்ஷித் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1988-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்ஷித். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Exit mobile version