ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்

இருதய சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ,இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருதய பிரச்னை காரணமாக முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வெற்றிகரமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version