முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு மரணத்தில் சந்தேகம்

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு மரணத்தில், சந்தேகம் உள்ளதாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில், பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடியில் வசித்து வந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் அன்பரசு. 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், உடல்நலக்குறைவால் நேற்று திடீரென உயிரிழந்தார். இந்த நிலையில், எம்.பி அன்பரசு மரணத்தில், சந்தேகம் உள்ளதாக அவரது மகள் சுமதி சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தையின் மரணத்திற்கு தனது அண்ணன் அருள் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version