குமாரசாமி தன்னை எதிரியாக தான் பார்த்தார் : காங்கிரஸ் தலைவர் சித்தராமையா

குமாரசாமி தன்னை தலைவராவோ, நண்பராகவோ இல்லாமல் எதிரியாக மட்டும் தான் பார்த்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருந்து 15எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், கூட்டணி ஆட்சியில் குமாரசாமி தன்னை விரோதியாகவே பார்த்தார் என கூறினார். மேலும் குமாரசாமி தன்னை நண்பராகவோ, தலைவராகவோ பார்க்காமல் எதிரியாக மட்டுமே பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாவும் சித்தராமையா தெரிவித்தார்.

Exit mobile version