தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சுமார் ஏழரை அடி உயர வெண்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றார். அதிமுக கூட்டணி மெகா கூட்டணி என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கூட்டணியாலும் முடியாது என்றும் கூறினார். அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சிலை திறப்பிற்குப் பிறகு, காரில் புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடியை, வழியில் புதுமண தம்பதி சந்தித்து, ஆசிர்வாதம் வாங்க விரும்பினர். இதனையடுத்து, அவர்களை முதலமைச்சர் ஆசீர்வதித்தார்.