குற்றாலம் அருகே உள்ள சிற்றருவி, வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய சிற்றருவி உள்ளது. இங்கு கோடைகாலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சிற்றருவியில் நுழைவு கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். பல ஆண்டுகளாக இந்த அருவி குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் டெண்டர் மூலம் விடப்பட்டது. இதன் மூலம் வனத்துறைக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளாக கட்டணம் செலுத்தப்படாததால் 1ம் தேதி அருவியை வனத்துறை மூடியது. இந்த சீசனில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் நுழைவு கட்டணம் குறித்து வரும் காலங்களில் முடிவு செய்யப்படும் என வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.