பில்லூர் அணையின் நீர் வரத்து குறைந்ததால், பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் வாரம் முதல், மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. இதற்காக வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் பலர் குடும்பத்துடன் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த ஒன்றரை மாதங்களாக, இந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யபட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக படிப்படியாக மழை குறைந்த நிலையில், அனையின் நீர் மட்டம் 88 அடியாக உள்ளது. எனவே வரும் வாரம் முதல் பரளிக்காடு சூழல் சுற்றுலா வழக்கம் போல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.