அரிசி ராஜா காட்டுயானையை வனத்துறையினர் பிடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாசி பாளையத்தில் அரிசி ராஜா காட்டு யானையை இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்த அரசி ராஜா என்ற காட்டுயானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று வனப்பகுதிக்குள் சென்ற அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இரண்டு நாட்களாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். கனவா காடு, குண்டுட்டி பலம், செருப்படிபாறை ஆகிய பகுதிகளில் 3 குழுக்களாக பிரிந்து வனத்திற்குள் சென்ற வனத்துறையினர், யானைக்கு பிடித்த அரிசியினை வைத்து காத்துள்ளனர். ஒற்றைக்காட்டு யானையால் அச்சமடைந்த மக்கள் மலைக்கோயிலில் தஞ்சம் அடைந்து பின்பு அதிகாலை தங்களது வீட்டிற்கு சென்றனர்.

Exit mobile version