ஒசூர் பொது மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர் சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள விளைநிலங்களில் முகாமிட்டுள்ளன. கடந்த வாரம் இந்த யானைகள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதில் காட்டுயானைத் தாக்கி வனக்காவலர் படுகாயமடைந்ததால் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மீண்டும் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version