வனப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கு வன விலங்குகள் நுழைவதால் திட்டக்குடி பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நாங்கூர் காப்புக்காடு மற்றும் சிறுபாக்கம் அருகே உள்ள காப்புக்காட்டில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வறட்சி காரணமாக, குடிநீர் தேடி வன விலங்குகள் கிராமங்களுக்கு வருகின்றன. அப்படி வரும் விலங்குகள், சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. விளைநிலங்களுக்குள் புகும் வன விலங்குகள் பயிர்களையும் அழித்து வருகின்றன. இந்த நிலையில் வன பகுதியில் உள்ள தொட்டிகளில் நீர் சேமிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.