வன விலங்குகள் கோடைகாலத்தை சமாளிக்கும் விதமாக சுருளி அருவி பகுதியில் நீர் தேக்க குழிகள் அமைக்கும் பணியை வனத்துறை தொடங்கியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் மேகமலை வன உயிரின சரணலாயம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, மான், புலி, குரங்கு, முயல் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சுருளி அருவி பகுதியில் மழை இன்றி நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெயற வாய்ப்புள்ளதால் வனத்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீர் தேங்கும் வகையில் குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மழை காலங்களில் வரக்கூடிய தண்ணீர், குழிகளில் தேங்கி வன விலங்குகளுக்கு பயனளிக்கும் வகையில் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.