தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினர்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர், இந்தியா மற்றும் தமிழக கலாச்சாரத்தினை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ளனர். இந்தநிலையில், தூத்துக்குடி அருகே சாயர்புரம் கிராமத்தில் கதர் வேட்டி, கதர் கைத்தறி புடவை அணிந்து, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் படைத்து, புதுப்பானை வைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கும் போது, பொங்கலோ பொங்கலோ என குழவையிட்டு அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்டுத்தினர். தமிழக கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதாகவும் வெளிநாட்டு
சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.