சசிகலா மீதான அந்நிய செலவாணி மோசடி வழக்கு – வழக்கை 4 மாத காலத்திற்கு முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சசிகலா மீதான அந்நிய செலவாணி மோசடி வழக்கை நான்கு மாத காலத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா மீது பெங்களூரு சிறையில் இருந்து, கான்ப்ரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவர் கையெத்திடவில்லை எனக்கூறி, 13ம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சசிகலா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மறு குற்றச்சாட்டு பதிவிற்கு காணொலி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி அளித்தது. மேலும், இந்த வழக்கை 4 மாத காலத்திற்கு முடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

Exit mobile version