பருவகால மாற்றத்தால், இடம்பெயர்ந்து வந்துள்ள பறவைகளை குஜராத்தியர்கள் வரவேற்று ரசித்து உணவளிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
பருவகால மாற்றத்தை பொருத்து உணவு மற்றும் இனப் பெருக்கத்திற்காக பறவைகள் மிதவெப்ப மண்டலமான தெற்காசிய நாடுகளை நோக்கி படையெடுத்துள்ளன. இதன் ஒருபகுதியாக சைபீரியா, ரஷ்யா உள்ளிட்ட குளிர்பகுதிகளை சேர்ந்த பறவைகள் குஜராத்தில் குவிந்து வருகின்றன. அவற்றை வரவேற்கும் குஜராத் மக்கள், பறவைகளுக்கு உணவளித்து, அவற்றின் செயல்பாடுகளின் ரம்மியமான காட்சிகளை ரசிப்பது பலரையும் ஈர்க்கும் விதமாக உள்ளது.