கோவையை முப்பரிமாண ஓவியங்களால் செதுக்கிய வெளிநாட்டு கலைஞர்கள்!

கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் இருவர் நவீன ஓவியங்கள்  வரைந்து அசத்தி வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த  ஜோசப், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  லிலியா இருவரும் இணைந்து கோவையில் பல்வேறு பகுதிகளில்  அழகான ஓவியங்களை வரைந்து வருகிறார்.  டவுன் ஹாலில் உள்ள நூலக கட்டடம், காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் இவர்கள் வரைந்த ஓவியங்கள்  பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், இருவரும் கோவை உக்கடம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். முப்பரிமாண முறையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. 2 ஓவியர்களின் தங்கும் செலவு மற்றும் கிரேன் உள்ளிட்ட இதர செலவுகளை மாநகராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version