வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஆய்வு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஆய்வு மேற்கொண்டார்.

வைகுண்ட வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் திறக்கப்படும் சொர்க்கவாசல் 19 ம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் திறந்திருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும் சொர்க்கவாசல் பிரவேசத்திற்காகவும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொர்க்கவாசல் பிரவேசத்திற்காக பக்தர்கள் இப்போதே வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.பக்தர்களின் வசதிக்காக மாடவீதிகள், நாராயணகிரி பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக செட்டுகளை தேவஸ்தானம் அமைத்துள்ளது. இங்கு உணவு, குடிநீர்,டீ, காபி, பால் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் தேவஸ்தானம் செய்திருக்கும் அடிப்படை ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Exit mobile version