மேட்டூர் அருகே கிராமப்புற மாணவர் பெட்ரோலுக்கு பதிலாக தனது இரு சக்கர வாகனத்தில் மாற்று எரிபொருளாக கால்சியம் கார்பைட்டை தண்ணீரில் கலந்து பயன்படுத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் காரைக்காடு இடும்பன் தோட்டத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் தட்சிணாமூர்த்தி, பெட்ரோலுக்கு பதிலாக கால்சியம் கார்பனேட் வாயுவை பயன்படுத்தி தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் சுண்ணாம்பு கற்களை உடைத்து தூளாக்கி தண்ணீரை ஊற்றினால் கால்சியம் ஆக்சைடு வாயு உருவாகுமென தெரிவிக்கும் தட்சிணாமூர்த்தி, மற்றொரு குழாய் மூலம் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.