திருநங்கைகளுக்கு பசுமை வீட்டிற்கான உத்தரவை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், சூரிய மின்சக்தியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 22 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான உத்தரவினை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். அரசாணையை பெற்ற திருநங்கைகள் இலவச வீடு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version