சுற்றுலாப் பணிகளுக்கான பயணச்சீட்டு முறை, இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது

மும்பையில் புறநகர் ரயில்களில் நடைமுறையில் உள்ள சுற்றுலாப் பணிகளுக்கான பயணச்சீட்டு முறை, இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மும்பைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கென, புறநகர் ரயில்களில் பயணம் செய்ய, பிரத்யேக பயணச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. 50 ரூபாய்க்கு ஒருநாள் பயணச் சீட்டை வாங்குபவர்கள், 24 மணி நேரமும், மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய முடியும். மும்பையில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பயணச் சீட்டு முறை, இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புறநகர் ரயில்களில் ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என, சுற்றுலாப் பயணிகளுக்கான பயணச் சீட்டை தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய், 3 நாட்களுக்கு 94 ரூபாய், 5 நாட்களுக்கு 116 ரூபாய் என இந்த பயணச் சீட்டுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயிலில், ஏசி, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என, அவற்றிற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version